Home வணிகம்/தொழில் நுட்பம் கின்னஸ் சாதனைகளை படைக்கும் மிக விலை உயர்ந்த கார் லண்டனில் ஏலத்திற்கு வருகிறது

கின்னஸ் சாதனைகளை படைக்கும் மிக விலை உயர்ந்த கார் லண்டனில் ஏலத்திற்கு வருகிறது

652
0
SHARE
Ad

f3337f24-4973-4363-ad96-d47902a27367_S_secvpf

லண்டன், நவம்பர் 8 – தங்கம் மற்றும் விலை உயர்ந்த வைரத்தை கொண்டு உருவாக்கப்பட்டு வரும் உலகின் மிக விலை உயர்ந்த கார் அடுத்த ஆண்டு லண்டன் ஏல மையத்திற்கு வருகிறது.

ஜெர்மன் பொறியாளர் ராபர்ட் குல்பென் வடிவமைத்து வரும் இந்த லம்பார்கினி அவெண்டாடர் எல்.பி. 700-4 என்ற சிறிய வகை மாதிரி கார் துபாயில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

22 காரட் 500 கிலோ கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகள், 25 கிலோ கிராம் விலையுர்ந்த வைரக்கற்களை கொண்டு பைபருடன் சேர்த்து இந்த கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது. 700 குதிரை திறன் கொண்ட இயந்திரம் இந்த காரில் பொருத்தப்படுகிறது.

அடுத்த ஆண்டு லண்டன் ஏல மையத்திற்கு வரும் இந்த கார் 46 லட்சம் பவுண்ட்சுக்கு விற்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த கார் உலகிலேயே மிக விலை உயர்ந்த மாதிரி கார், குண்டு துளைக்காத வசதியுள்ள கார் மற்றும் மிக ஆடம்பரமான முத்திரை கொண்ட கார் என மூன்று பிரிவுகளில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் என்று உறுதியாக கூறப்படுகிறது.