Home 13வது பொதுத் தேர்தல் சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் ஆவி வாக்காளர்கள் இல்லை – தேர்தல் ஆணையம்

சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் ஆவி வாக்காளர்கள் இல்லை – தேர்தல் ஆணையம்

575
0
SHARE
Ad

Abdul Aziz Mohd Yusoffகோலாலம்பூர், நவ 8 – நடந்து முடிந்த சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் ஆவி வாக்காளர்கள் வாக்களித்திருக்கலாம் என்ற கருத்தை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அஜீஸ் முகமட் யூசோப் கூறுகையில், “ஷாஹிடன் காசிம் கூறுவது போல் அடையாளம் தெரியாத வாக்காளர்கள் யாரும் இடைத்தேர்தலில் வாக்களிக்கவில்லை. ஆவி வாக்காளர்கள் யாரும் இல்லை. சில வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்களிக்க பதிவு செய்ததோடு தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிக்காமல் சென்றுவிட்டார்கள்.” என்று தெரிவித்தார்.

சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் புக்கிட் பெசார் போன்ற தொகுதிகளில் அடையாளம் தெரியாத வாக்காளர்கள் வாக்களித்ததாகவும், அதற்கான ஆதாரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாகவும் பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடன் காசிம் குற்றம்சாட்டினார்.

#TamilSchoolmychoice

ஆனால் அக்குற்றச்சாட்டை மறுத்த அப்துல் அஜீஸ் அவர்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்று தெரிவித்தார்.

பாஸ் கட்சியின் கோட்டையான சுங்கை லிமாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஸ் குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.