Home அரசியல் “இரண்டு அரசாங்கங்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றோம்” – பாஸ்

“இரண்டு அரசாங்கங்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றோம்” – பாஸ்

623
0
SHARE
Ad

main_RA_p3main_0511 (1)கெடா, நவ 5 – நேற்று நடந்த சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் பாஸ் வேட்பாளர் முகமட் அஸாம் சமட் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அத்தொகுதியில் பாஸ் 6 வது முறையாக ஆட்சியை அமைக்கிறது.

கடந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் சுங்கை லிமாவ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட கெடா மாநில முன்னாள் மந்திரி பெசார் அஸிஸான் அப்துல் ரசாக், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் ஃபாசில்லா முகமட் அலி மற்றும் இரு சுயேட்சை வேட்பாளர்களை தோற்கடித்து, 13, 294 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஆனால் தீவிர நீரிழிவு நோயின் காரணமாக அஸிஸானுக்கு கடந்த மே மாதம் இரண்டு கால்களையும் முட்டிக்கு கீழ் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

அதன்பிறகும், நோயில் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்த அஸிஸான் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி  சுல்தானா பாஹியா மருத்துவமனையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி அஸிஸானுக்குப் பதிலாக சுங்கை லிமாவ் தொகுதியின் புதிய சட்டமன்ற உறுப்பினராக வரும் நவம்பர் 18 ஆம் தேதி அஸாம் பதவி ஏற்பார்.

பாஸ் துணைத்தலைவர் முகமட் சாபு பாஸ் வெற்றி குறித்து கருத்து கூறுகையில், “நாங்கள் சட்டமன்றம் மற்றும் கூட்டரசு ஆகிய இரண்டு அரசாங்கங்களுடன் போட்டியிட்டோம். அவர்கள் எல்லோரும், எது எதையோ இங்கே அழைத்துக் கொண்டு வந்தார்கள். அதில் வாத்துகளும், மாடுகளும் அடங்கும்” என்று தெரிவித்தார்.

மேலும் பாஸ் உதவித் தலைவர் மஹ்பஸ் ஓமார் கூறுகையில், “பாஸ் வெற்றி அல்லா கொடுத்த அர்த்தமுள்ள பரிசு. நான் மிகவும் கவலை அடைந்திருந்தேன் காரணம் கெடா மாநில பாஸ் ஆணையராக எனக்கு இது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது. நாங்கள் இரண்டு அரசாங்கங்களோடு போட்டியிட்டோம்.” என்று தெரிவித்தார்.

அத்துடன், 13வது பொதுத்தேர்தலில் 2,774 வாக்குகள் வித்தியாசத்தில் பாஸ் வெற்றியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, தற்போது 1,084 வாக்குகள் என்பது குறைந்த பெரும்பான்மை என்று தேசிய முன்னணி கூறுகிறது. ஆனால் வெளியூர்களுக்குப் போயிருக்கும் 1000 பேர் திரும்ப ஊருக்கு வந்திருந்தால் நாங்கள் அதே அளவு பெரும்பான்மையை அடைந்திருப்போம் என்றும் ஓமார் தெரிவித்தார்.

கோழி, சமையல் எண்ணெய், மாங்கன்று மற்றும் காலாவதியான பால் முதற்கொண்டு தேசிய முன்னணி என்னென்னவோ பொருட்களை லஞ்சமாகக் கொடுத்துப் பார்த்தது ஆனால் சுங்கை லிமாவ் பாஸ் கட்சியின் கோட்டை என்பது இந்த இடைத்தேர்தல் வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது என்றும் ஓமார் தெரிவித்தார்.