Home நாடு சுங்கை லிமாவ் சட்டமன்ற உறுப்பினராக அசாம் இன்று பதவி ஏற்பு!

சுங்கை லிமாவ் சட்டமன்ற உறுப்பினராக அசாம் இன்று பதவி ஏற்பு!

623
0
SHARE
Ad

main_RA_p3main_0511-1அலோர் செடார், நவ 18 – சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பாஸ் வேட்பாளர் முகமட் அசாம் சமட் இன்று கெடா மாநில சபாநாயகர் டத்தோ முகமட் ரோசாய் சபியன் முன்பாகப் பதவி ஏற்கிறார்.

பாஸ் கட்சியைச் சேர்ந்த முகமட் அசாம் (வயது 37), கடந்த நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் அகமட் சுஹைமி லாசிமை விட 1,084 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிபெற்றார்.

கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி முன்னாள் கெடா மந்திரி பெசார் டான்ஸ்ரீ அசிஸான் அப்துல் ரசாக்கின் மறைவைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.