Home கலை உலகம் நடிகை சினேகா கர்ப்பம்

நடிகை சினேகா கர்ப்பம்

678
0
SHARE
Ad

sneha prasa 300-200

சென்னை, நவம்பர் 18- நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு கணவர் பிரசன்னா சினிமாவில் நடிக்க முழு சுதந்திரம் கொடுத்ததால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தார் சினேகா. அதுமட்டுமில்லாமல் விளம்பரம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்து வந்தார்.

இந்நிலையில், சினேகா கர்ப்பமாகியிருக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் பரவி வருகிறது. அவர் கர்ப்பமாகியிருப்பதால் குழந்தை பிறந்து 2 வயது ஆகும் வரை இனி எந்த படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்ளமாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

தற்போது சினேகா நடித்துக் கொண்டிருக்கும் ஒருசில படங்களின் படப்பிடிப்புகளை முடித்துக் கொடுத்துவிட்டு வீட்டில் தங்கி ஓய்வெடுக்கப் போகிறாராம்.

சினேகா கர்ப்பமாகியிருக்கும் செய்தி கேட்டு அவரது கணவர் பிரசன்னா மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். மனைவி சினேகாவுக்கு பிடித்தமான உணவு வகைகளை வாங்கிக் கொடுத்து சந்தோஷமாக வைத்துள்ளாராம் பிரசன்னா.