Home கலை உலகம் சினேகாவிடம் மோகன்ராஜா மன்னிப்புக் கேட்டது ஏன்?

சினேகாவிடம் மோகன்ராஜா மன்னிப்புக் கேட்டது ஏன்?

1328
0
SHARE
Ad

Snegaசென்னை – மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா உள்ளிட்டோர் நடித்திருந்த ‘வேலைக்காரன்’ திரைப்படம் கடந்த டிசம்பர் 22-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இத்திரைப்படத்தில் சினேகா மிக முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

கலப்பட உணவுக்கு எதிராகப் போராடும் பெண்ணாக நடித்திருந்த சினேகாவின் கதாப்பாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இத்திரைப்படத்தில் சுமார் 20 நாட்கள் நடித்துக் கொடுத்த சினேகாவிற்கு, படம் பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சியாக இருந்திருக்கிறது.

காரணம், அவர் மிகவும் எதிர்பார்த்தப் பல காட்சிகள் வெட்டப்பட்டிருந்தன.

இதனால், சினேகா, இயக்குநர் மோகன் ராஜா மீது மிகவும் வருத்தத்துடன் இருந்திருக்கிறார்.

இந்நிலையில், சினேகாவின் காட்சிகள் வெட்டப்பட்டதற்கு இயக்குநர் மோகன்ராஜா வருத்தம் தெரிவித்ததோடு, சினேகாவிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

சினேகாவின் காட்சிகளில் பெரும்பாலும் வசனங்களின்றி வேகமாக நகரும் காட்சிகளாக இருந்த காரணத்தால், அவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது என்றும் மோகன்ராஜா விளக்கமளித்திருக்கிறார்.