Home நாடு செராசில் ‘3 நிமிடங்களில்’ 1.5 மில்லியன் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

செராசில் ‘3 நிமிடங்களில்’ 1.5 மில்லியன் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

722
0
SHARE
Ad

Robberyகோலாலம்பூர் – ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் செராஸ், தாமான் சேகாரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இருந்த நகைக் கடையில் புகுந்த கொள்ளையர்கள் 3 நிமிடங்களில் அங்கிருந்த 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

சுமார் 10 பேர் அடங்கிய அக்கொள்ளை கும்பல் சுத்தியல் போன்ற ஆயுதங்களைக் கொண்டு கடையை உடைத்து இக்கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக செராஸ் மாவட்டத் துணை காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் இஸ்மாடி போர்ஹான் தெரிவித்திருக்கிறார்.

தற்போது வணிக வளாகத்தில் இருந்த இரகசியக் கேமராப் பதிவுகளை வைத்து கொள்ளையர்களைப் பிடிக்கும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இஸ்மாடி குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice