Home நாடு பாஸ் இனி உண்மையான எதிர்க்கட்சி கிடையாது – குவான் எங் கருத்து!

பாஸ் இனி உண்மையான எதிர்க்கட்சி கிடையாது – குவான் எங் கருத்து!

779
0
SHARE
Ad

Lim-Guan-Engஜார்ஜ் டவுன் – போக்கோக் சேனா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மாஃபஸ் ஓமார், பாஸ் கட்சியிலிருந்து விலகியது, அக்கட்சி தனது நிஜமான அரசியல் நிலைப்பாட்டிலிருந்து விலகியிருப்பது தெரிகின்றது என ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

பாஸ் கட்சி இரகசியமாக அம்னோவுக்கு ஆதரவு தெரிவிப்பதையடுத்து, பாரிசானை எதிர்க்கும் விதமாக மாஃபஸ் பாஸ் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார் என்றும் குவான் எங் குறிப்பிட்டார்.

எனவே, பாஸ் கட்சி இனி உண்மையான எதிர்கட்சி கிடையாது என்று கூறும் குவான் எங், அம்னோ பாஸ் கட்சியை ஒரு “நல்ல எதிர்கட்சி” என்று நாசூக்காகப் புகழ்வதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த 30 ஆண்டுகளாக பாஸ் கட்சியில் இருந்த மாஃபஸ் நேற்று முன்தினம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், மாஃபஸ் பக்காத்தான் ஹராப்பான் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், அவர் பக்காத்தான் ஹராப்பானில் எந்த கட்சியுடன் இணைவார் என்பது இன்னும் தெரியவில்லை.