Home One Line P2 பிரசன்னா – சினேகா தம்பதியருக்கு “தை மகள் வந்தாள்”

பிரசன்னா – சினேகா தம்பதியருக்கு “தை மகள் வந்தாள்”

1270
0
SHARE
Ad

சென்னை – நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா தம்பதியருக்கு இரண்டாவதாக பெண் குழுந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை இருக்கிறது. தங்களின் பெண்குழந்தை தை மாதத்தில் பிறந்த காரணத்தால், “தை மகள் பிறந்தாள்” என அவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.

சினேகா அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “பட்டாஸ்” படத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்குப் பின்னர் ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்த பின்னரும் அவர் தொடர்ந்து நடித்து வந்தார்.

பிரசன்னாவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். கதாநாயகன் என்று மட்டும் இல்லாமல், வில்லனாகவும், குணசித்திரமான துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதாக அவரும், சினேகாவும் தனித் தனியே தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.