Home 13வது பொதுத் தேர்தல் சுங்கை லிமாவ் இடைத்தேர்தல்: 1,084 வாக்குகள் வித்தியாசத்தில் பாஸ் வெற்றி!

சுங்கை லிமாவ் இடைத்தேர்தல்: 1,084 வாக்குகள் வித்தியாசத்தில் பாஸ் வெற்றி!

637
0
SHARE
Ad

PAS_wonகெடா, நவ 4 – இன்று நடைபெற்ற சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் 1,084 வாக்குகள் வித்தியாசத்தில் பாஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

பாஸ் வேட்பாளர் முகமட் அஸாம் சமட் (வயது 37), தன்னை  எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர்  அகமட் சொஹைமி லாஸிமை (வயது 52) விட 1,084 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வாக்குகள் விபரம் பின்வருமாறு:- 

#TamilSchoolmychoice

பாஸ் வேட்பாளர் முகமட் அஸாம் சமட்  – 12,096

தே.மு வேட்பாளர் அகமட் சொஹைமி லாஸிம் – 10,985

பெரும்பான்மை – 1,084