Home கலை உலகம் 5 படங்களில் இருந்து கழட்டி விடப்பட்ட நஸ்ரியா!

5 படங்களில் இருந்து கழட்டி விடப்பட்ட நஸ்ரியா!

749
0
SHARE
Ad

Raja-Rani-Nasria-Arya

சென்னை, நவம்பர் 5- நேரம், ராஜாராணி படங்களில் நடித்த நஸ்ரியாநசீமுக்கு அதற்கடுத்து 5 படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நய்யாண்டி படத்தின் தொப்புள் விவகாரத்தை மலையளவு பிரச்னையாக்கியதால் கோலிவுட்டே அதிர்ந்து போனது. அதையடுத்து தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் நடிப்பதைப் பார்த்து அடுத்து அவரது அந்தஸ்து உயரப்போகிறது என்று நினைத்து நடிக்க ஒப்பந்தம் கேட்ட அனைவரும் அம்முயற்சியை கை விட்டனர்.

அந்த வகையில், 5 படங்கள் வரை இழந்திருக்கிறார் நஸ்ரியா. தற்போது அவரது கைவசம் ஜெய்யுடன் நடிக்கும் திருமணம் என்னும் நிக்கா மற்றும் பாலாஜி மோகன் இயக்கும் படம் என இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது. இதில் திருமணம் என்னும் நிக்காதான் அவர் தமிழில் ஒப்பந்தமான முதல் படம்.

#TamilSchoolmychoice

ஆக, இந்த தொப்புள் சர்ச்சைக்குப் பிறகு அவருக்கு ஒப்பந்தம் செய்த பாலாஜி மோகன் படம் மட்டுமே. இந்த படத்தில் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பதால், தமிழ், மலையாளம் என இரண்டு மொழியிலும் படத்தை வெளியிடுவதால், இரண்டு மொழிக்கும் பரிட்சயமான நடிகை உடனடியாக கிடைக்காமல் நஸ்ரியா பக்கம் சாய்ந்திருக்கிறார்களாம்.

இப்படி எதிர்பாராதவிதமாக அவரின் சந்தை சரிந்து விட்டதால், இனி கோடம்பாக்கத்தை நம்பி புண்ணியம் இல்லை என்று முடிவெடுத்து விட்ட நஸ்ரியா, தனது தாய்மொழியான மலையாளத்தில் நடிக்க முடிவெடுத்து விட்டார்.