Home கலை உலகம் அஜீத் நடிக்கும் ‘வீரம்’ படத்தின் முன்னோட்டம் திரையரங்குகளில் வெளியீடு

அஜீத் நடிக்கும் ‘வீரம்’ படத்தின் முன்னோட்டம் திரையரங்குகளில் வெளியீடு

563
0
SHARE
Ad

 Ajith-still-from-Veeram-Movie-300x194

சென்னை, நவம்பர் 8- ‘ஆரம்பம்’ படத்தைத் தொடர்ந்து அஜீத் நடித்து வரும் படம் ‘வீரம்’. கிராமத்து கதையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும் விதார்த், மனோசித்ரா, சந்தானம் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ‘சிறுத்தை’ சிவா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் நேற்று தொடங்கி சென்னையில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்போவதாக இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் நாளை முதல் வெளியூர்களில் உள்ள திரையரங்குகளில் இந்த முன்னோட்டம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அஜீத் நடித்து தீபாவளிக்கு வெளியான ‘ஆரம்பம்’ படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர். அந்த உற்சாகத்துடன் ‘வீரம்’ படத்தில் களமிறங்கியிருக்கும் அஜீத், அதே நரைத்த முடி, வேஷ்டி சட்டையில் இந்த படத்தில் நடித்துள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜயா கம்பைன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளனர்.