Home கலை உலகம் ஐம்பது நாட்களைத் தொட்ட ஜில்லா, வீரம் எந்த திரையரங்குகளிலும் ஓடவில்லை!

ஐம்பது நாட்களைத் தொட்ட ஜில்லா, வீரம் எந்த திரையரங்குகளிலும் ஓடவில்லை!

572
0
SHARE
Ad

17-1389932654-jilla-vijay-veeram-ajith6-600சென்னை, மார் 1 – விஜய் நடித்த ஜில்லா மற்றும் அஜீத் நடித்த வீரம் படங்கள் 50 நாட்களைத் தொட்டுவிட்டதாக விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள திரையரங்குகளில் ஒன்றில் கூட இந்த இரண்டு படங்களுமே ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நடிக்க, ஆர் நேசன் இயக்கத்தில் ஆர் பி சவுத்ரி தயாரித்த ஜில்லா படம், கடந்த பொங்கலுக்கு வெளியானது. அஜீத் நடிக்க, சிவா இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த வீரம் படமும் பொங்கலன்று வெளியானது. ஆரம்பத்தில் இந்த இரு படங்களுக்குமே வசூல் குவிந்ததாக தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து தகவல் கிடைத்தன.

ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு, இந்த இரு படங்களிலிருந்தும் வசூலாகவில்லை என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரே அறிவிக்கும் அளவுக்குப் ஆகிவிட்டது இப்படங்கள். இந்த நிலையில் இரு படங்களும் 50 நாட்களைக் கடந்து ஓடுவதாக இன்றைய நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

ஆனால், விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அரங்குகள் எதிலுமே இந்தப் படங்கள் ஓடவில்லை. ஆம். இவர்கள் விளம்பரங்களில் போட்டுள்ள சத்யம், எஸ்கேப், அபிராமி, சங்கம், தேவி, மாயாஜால், ஐநாக்ஸ், பிவிஆர் என எந்த அரங்கிலுமே ஒரு காட்சி கூட இந்த இரு படங்களும் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது