சென்னை, நவம்பர் 14- ‘கரகாட்டகாரன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘பணக்காரன்’, ‘மைடியர் மார்த்தாண்டன்’ உள்பட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் குள்ளமணி.
‘நவாப் நாற்காலி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான குள்ளமணி எம்.ஜி.ஆர்., சிவாஜி என ஆம்பித்து கமல், ரஜினி என தொடர்ந்து தனுஷ் என அனைத்து முக்கிய நடிகர்களின் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
61 வயதாகும் நடிகர் குள்ளமணி சென்னை கே.கே நகரில் வசித்து வந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணி கடந்த ஞாயிற்றுக்கிழமை உறங்க சென்ற அவர் 2 நாட்களாகியும் எழுந்திருக்கவில்லை கோமா நிலையில் இருந்த அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.