Home இந்தியா காமன்வெல்த் மாநாட்டை தீர்ப்பு வழங்கும் அல்லது தண்டனை வழங்கும் அமைப்பாக பயன்படுத்த வேண்டாம்: தொடக்கவுரையில் ராஜபக்சே

காமன்வெல்த் மாநாட்டை தீர்ப்பு வழங்கும் அல்லது தண்டனை வழங்கும் அமைப்பாக பயன்படுத்த வேண்டாம்: தொடக்கவுரையில் ராஜபக்சே

504
0
SHARE
Ad

rajapaksa 300-200

இலங்கை, நவம்பர் 15- 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. மனித உரிமையின் முக்கிய அம்சமான வாழும் உரிமை இலங்கை அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தாமரைத் தடாகத்தில் மண்டபத்தில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, ‘காமன்வெல்த்  மாநாட்டை தீர்ப்பு வழங்கும் அல்லது தண்டனை வழங்கும் அமைப்பாக பயன்படுத்தாது மக்களின் நலன்புரி மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

‘அனைத்து மதங்களையும் இலங்கை மதிக்கின்றது. ஏனையோர் செய்யாதவை தொடர்பில் தேடுவதை விடுத்து செய்தவை தொடர்பில் தேடிப் பார்ப்பதே எமது கடமையாக வேண்டும்’ என தர்ம தேசனையிலுள்ள வசனமொன்றை எடுத்துரைத்து ஜனாதிபதி தனது உரையை முடித்துக்கொண்டார்.