Home இந்தியா ஜெயலலிதா,விஜயதாரணியை ஆபாசமாகத் திட்டிய தொலைக்காட்சி நேயர்!

ஜெயலலிதா,விஜயதாரணியை ஆபாசமாகத் திட்டிய தொலைக்காட்சி நேயர்!

528
0
SHARE
Ad

mla-vijayadharaniகோலாலம்பூர், நவம்பர் 15 – தமிழகத்தில் உள்ள சத்தியம் என்ற தனியார் தொலைக்காட்சி ஒன்றில், நேற்று முன்தினம் இரவு இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற நேரடி நிகழ்ச்சியில், தொலைக்காட்சி நேயர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதாவையும், காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ விஜயதாரணியையும் மிக மோசமான வார்த்தையால் திட்டிய விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘சத்தியம் அது சாத்தியம்’ என்ற தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியின் போது தொலைப்பேசியில் அழைத்த ஒருவர், மிகவும் ஆபாசமான வார்த்தையால் ஜெயலலிதாவையும், விஜயதாரணியையும் திட்டினார்.

நேரடி ஒளிபரப்பு என்பதால் உடனடியாக அதை தணிக்கை செய்ய முடியாத செய்தி நிறுவனமும், அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரும் செய்வதறியாது தவித்தனர்.

#TamilSchoolmychoice

அந்த நேயரின் வார்த்தையைக் கேட்ட விஜயதாரணி கொதித்தெழுந்ததோடு மட்டுமல்லாது, சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்தையும், நேயரையும் சரமாரியாக விமர்சித்துத் தள்ளிவிட்டார்.

காவல்துறை ஆணையரிடம் புகார்

இவ்விவகாரம் தொடர்பாக இரவு 11.30 மணியளவில் வேப்பேரி காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்ற விஜயதாரணி(படம்), அந்த நேயர் மீது புகார் மனு ஒன்றை அளித்தார்.

நேரடி நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவன அலுவலகம் ராயபுரத்தில் உள்ளது. இதையடுத்து ராயபுரம் காவல்துறையினர் புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்ணை வைத்து நேரலையில் ஆபாசமாகத் திட்டியவர் யார் என்ற விபரம் தெரிந்துவிட்டது. அவரை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.