Home வாழ் நலம் உதடு வெடிப்புக்கு சிறந்தது தேங்காய் எண்ணெய்

உதடு வெடிப்புக்கு சிறந்தது தேங்காய் எண்ணெய்

642
0
SHARE
Ad

lip-care

கோலாலம்பூர், டிசம்பர் 6 – குளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும், தலைமுடியும், உதடுகளும் வறண்டு காணப்படும். இவற்றை பராமரிக்க நாம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே எளிய முறையில் நமது சருமத்தை பராமரிக்கலாம்.

நமது சருமம் குளிர்காலத்தை உணரும் திறனை பெற்றுள்ளது. ஆனால், நமது உதடுகளோ இதை காட்டிலும் இரண்டு மடங்கு உணரும் திறனை பெற்றிருக்கின்றது. நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் கிடைப்பதில்லை.

#TamilSchoolmychoice

இதனால், நமது உடலில் உள்ள மற்ற சருமத்தைக்காட்டிலும் உதடுகளுக்கு அதிக கவனம் தேவைப்படுகின்றது. குளிர்காலத்தில் நமது உதடுகள் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு அழகற்று காட்சியளிக்கின்றது. வறண்ட வெடித்த உதடுகளை குணமாக்க வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாலாடை போன்றவற்றை பயன்படுத்தலாம்.

இவற்றுள் தேங்காய் எண்ணெய் உங்கள் வெடித்த உதடுகளை சரிசெய்வதற்கு சிறந்ததாகும். இந்த எண்ணெய் உங்கள் உதடுகள் வறண்டு போவதை குறைத்து உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். தேங்காய் எண்ணெய் உங்கள் வறண்ட வெடித்த உதடுகளைச் சுற்றி ஒரு படலத்தை ஏற்படுத்தி குளிர்காற்றில் இருந்து பாதுகாக்கும்.