Home அரசியல் ம.இ.கா வில் அதிரடி மாற்றங்கள்! 7 புதிய மத்திய செயலவை உறுப்பினர்கள்!

ம.இ.கா வில் அதிரடி மாற்றங்கள்! 7 புதிய மத்திய செயலவை உறுப்பினர்கள்!

780
0
SHARE
Ad

Palanivel-and-MIC-300x202கோலாலம்பூர், டிச 16 – ம.இ.கா தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், இன்று கட்சியில் சில அதிரடி மாற்றங்களை செய்துள்ளார்.

அது குறித்து ம.இ.கா சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ பத்திரிக்கை அறிக்கையின் படி,

கட்சியின் புதிய பொதுச்செயலாளராக பிரகாஷ் ராவ், பொருளாளராக டத்தோ கே.ஆர் ரமணன், தகவல் தொடர்புத் தலைவராக முன்னாள் சிலாங்கூர் மாநில தகவல் தொடர்புத் தலைவராக இருந்த எல்.சிவசுப்ரமணியம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இது தவிர, 7  புதிய மத்திய செயலவை உறுப்பினர்களையும் பழனிவேல் நியமித்துள்ளார்.

அவர்கள், டான்ஸ்ரீ கே.குமரன், டான்ஸ்ரீ கேஎஸ் நிஜார், செனட்டர் டத்தோ பாரத் மணியம், தெங்காரோ சட்டமன்ற உறுப்பினர் கே.ரவீன்குமார், டத்தோ கே.எஸ் பாலகிருஷ்ணன், ராவுப் தொகுதித் தலைவர் கே.தமிழ் செல்வம் மற்றும் தெலுங் கெமாங் ம.இ.கா தொகுதித் தலைவர் டத்தோ ஆர்.பாலகிருஷ்ணன் ஆகிய 7  பேர் மத்திய செயலவைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.