Home அரசியல் ம.இ.காவின் புதிய மாநிலத் தலைவர்கள்!

ம.இ.காவின் புதிய மாநிலத் தலைவர்கள்!

768
0
SHARE
Ad

MIC-Logo-Sliderகோலாலம்பூர், டிச 16 – ம.இ.கா  கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இன்று அதிரடி மாற்றங்களைச் செய்த அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், கட்சியின் புதிய மாநிலத் தலைவர்களின் பெயர்களையும் அறிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநில நடப்பு தலைவரான ஜி.பழனிவேல், பேராக் மாநில நடப்பு தலைவரான டத்தோ ஆர்.கணேசன், கூட்டரசுப் பிரதேச நடப்புத் தலைவர் டத்தோ எம்.சரவணன் ஆகியோர் தங்களது மாநிலங்களிலேயே தலைவர் பதவியைத் தொடர்வார்கள்.

அதே போல், கிளந்தான், பெர்லிஸ், திரங்காணு மற்றும் சபா ஆகிய மாநிலங்களில், அதன் நடப்புத் தலைவர்களான எம்.குப்புசாமி, எஸ்.வேங்கடசாமி, ஆர்.சுப்பையா மற்றும் டத்தோ வி.ஜோதி ஆகியோர் தலைவர் பதவியைத் தொடர்வார்கள்.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில் மாநில வாரியாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் விபரம் பின்வருமாறு:-

தேசிய உதவித்தலைவர் டத்தோ எஸ். பாலகிருஷ்ணன் சின்னையா – ஜோகூர் மாநிலம்

தேசிய உதவித்தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதன் – நெகிரி செம்பிலான்

வழக்கறிஞர் டத்தோ எஸ்.கணேசன் – கெடா

வழக்கறிஞர் எம்.கருப்பண்ணன் – பினாங்கு

பகாங் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியான டத்தோ ஆர். குணசேகரன் – பகாங்

டத்தோ எம்.எஸ் மகாதேவன் – மலாக்கா

மேலும், மாநில வாரியான மகளிர், இளைஞர் பிரிவு புத்ரி மற்றும் புத்ரா ஆகியவற்றுக்கு இம்மாதத்திற்குள் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் பழனிவேல் தெரிவித்துள்ளார்.