Home இந்தியா லாலு பிரசாத் யாதவ் பிணையில் விடுதலை!

லாலு பிரசாத் யாதவ் பிணையில் விடுதலை!

501
0
SHARE
Ad

009_lalu_prasad_yadavபுதுடெல்லி, டிச 17 – கால்நடைத் தீவன ஊழல் வழக்கில்  குற்றம் நிரூபிக்கப்பட்டு ராஞ்சி சிறையில் கடந்த 74 நாட்களாக தண்டனை அனுபவித்து வந்த லாலு பிரசாத் யாதவ், நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி, கால்நடை ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, லாலு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் பிணை கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த டில்லி உச்ச நீதிமன்றம் அவருக்கு கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி பிணை வழங்கியது.

இதனையடுத்து லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் இருந்து நேற்று  விடுதலையானார்.