Home இந்தியா மோடிக்கு வாரணாசி தொகுதி அரசியல் புதைக்குழி – லாலு பிரசாத் யாதவ்!

மோடிக்கு வாரணாசி தொகுதி அரசியல் புதைக்குழி – லாலு பிரசாத் யாதவ்!

731
0
SHARE
Ad

Lalu and Modiடெல்லி, மார்ச் 17 – மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியை தேர்ந்தெடுத்த நரேந்திர மோடிக்கு அது அரசியல் புதைக்குழி என்று லாலு பிரசாத் யாதவ் கிண்டலாக கூறியுள்ளார்.  பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அக்கட்சியின் தலைமை வாரணாசி மக்களவை தொகுதியை ஒதுக்கியுள்ளது.

இதுபற்றி பாட்னாவில், ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வாரணாசியை பற்றி நரேந்திர மோடி என்ன நினைத்து இருக்கிறார்? வாரணாசி மத சார்பற்ற தொகுதி. எனவே மோடி அங்கு தோல்வி அடைவது உறுதி. இதுதான் மோடிக்கு அரசியல் புதைக்குழி என்பது நன்கு தெரிகிறது.

நரேந்திர மோடி எதற்காக அவரது சொந்த மாநிலத்தை விட்டு வாரணாசிக்கு வந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்? தேர்தலில் போட்டியிட பா.ஜ.க தலைவர்கள் தொகுதி கிடைக்காமல் சண்டையிட்டு வருவது மிகவும் நகைச்சுவையாக உள்ளது.

#TamilSchoolmychoice

போட்டியிட வாய்ப்பு கிடைத்தவர்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள எந்த தொகுதியில் நிற்பது என்று அங்கும் இங்கும் தேடி ஓடுகின்றனர். இவர்களில் நரேந்திர மோடியும் ஒருவர்.

ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அதிருப்தி காரணமாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை திருப்பி கொடுத்துவிட்டதாக ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகின்றன. இதை கட்சித் தொண்டர்களும் மக்களும் நம்பமாட்டார்கள் என்றார் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.