‘நான் மதவாத சக்திகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், பேராசைக்காரர்கள் நாடாளுமன்ற உறிப்பினராகவும், பிரதமர் பதவிக்காகவும் அலைகிறார்கள். இருந்தபோதிலும், ‘அவருக்கும் (ராம்கிர்பால் யாதவ்) அவரது குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்கள் உண்டு’ என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் ராம்கிர்பால் யாதவ், குலாம் கவுஸ் மற்றும் மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரை மறைமுகமாக தாக்கியுள்ளார். மேலும் அவரது மனைவியுமான ராப்ரி தேவி கூறும்போது, ‘ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவுகின்ற எவரையும், யாராலும் தடுத்து நிறுத்த முடியாது’ என்று தெரிவித்தார்.