Home இந்தியா தமிழகத்தில் ரூ.2.16 கோடி கைப்பற்றப்பட்டது – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

தமிழகத்தில் ரூ.2.16 கோடி கைப்பற்றப்பட்டது – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

499
0
SHARE
Ad

img1140215007_1_1சென்னை, மார்ச் 12 – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது, நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுக்காக மக்களுக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கையை தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சோதனையில் இதுவரை இரண்டு கோடியே 16 லட்சத்து 47 ஆயிரத்து 750 ரூபாய் ரொக்கமாக பிடிக்கப்பட்டுள்ளது. அதோடு 47 லட்சத்து 18 ஆயிரத்து 660 ரூபாய் மதிப்புள்ள சேலைகள், நகைகள் மற்றும் பல்வேறு பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் படமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் அனைத்தும் கருவூலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.