Home இந்தியா 543 தொகுதிகளின் முதல் சுற்று முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு தெரியும் – பிரவீன்குமார்!

543 தொகுதிகளின் முதல் சுற்று முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு தெரியும் – பிரவீன்குமார்!

672
0
SHARE
Ad

pireaveen kumaarபுதுடெல்லி, மே 15 – நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. காலை 10 மணிக்குள் முதல் சுற்று முடிவுகள் தெரியவரும். தமிழகத்தில் 42 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இந்த மையங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 9 கட்டங்களாக நடந்தது. 543 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 39 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் 42 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மத்திய துணை ராணுவப் படைகளின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தேர்தல் வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

#TamilSchoolmychoice

தேர்தலுக்குப் பிறகு வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாஜ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நாடு முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

நாளை காலை 10 மணிக்குள் முதல் சுற்று முடிவுகள் தெரியவரும். அதில், அடுத்து ஆட்சியமைக்க போகும் கட்சி எது என்பது ஓரளவுக்கு தெரிந்து விடும். இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நேற்று அளித்த பேட்டியில், வாரணாசி தொகுதிக்கு தேர்தல் சிறப்பு பார்வையாளராக சென்றிருந்தேன்.

அங்கு பொதுவாக அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது. எந்த வாக்குப்பதிவு மையத்திலும் மறு வாக்குப்பதிவு நடைபெறவில்லை. தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதற்கான அனைத்து பணிகளும் தயாராக உள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பயிற்சி வகுப்புகள் முடிந்துவிட்டது. திட்டமிட்டபடி நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் துவங்கும். முதல் சுற்று முடிவுகள் காலை 10 மணிக்குள் தெரிய வாய்ப்புள்ளது.

எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருந்தால் மாலை 6 மணிக்குள் வாக்குகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்டு யார் வெற்றி பெற்றார்கள் என்பது தெரியவரும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது இந்த மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.

ஒவ்வொரு மையத்திலும் 377 போலீசார் முதல் 400 போலீசார் என 42 மையங்களிலும் 13,500 மத்திய, மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இரவு எத்தனை மணி வரை என்றாலும் இடைவிடாமல் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்கப்பட்டு, உடனே வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது முறைகேடு நடந்ததாக சந்தேகப்பட்டு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றால் தேர்தல் முடிவு வெளியாகி 45 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். அதேபோன்று, தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 6 மாதம் வரை மின்னணு வாக்கு எந்திரத்தில் பாதுகாப்பாக இருக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.