Home இந்தியா வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இ-ஓட்டு: சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை!

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இ-ஓட்டு: சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை!

857
0
SHARE
Ad

election-commission-indiaபுதுடெல்லி, மே 21 – வெளிநாடு வாழ் இந்தியர்களும் தேர்தலில் வாக்களிக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தை தயார் செய்து சட்ட அமைச்சகத்துக்கு  தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப் பேரவை தேர்தல்களில் வெளிநாடு வாழ்  இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் என்றால் இந்தியாவுக்கு வந்து வாக்களிக்க வேண்டும்.

ஆனால், அதிக பணம் செலவழித்து இந்தியா வந்து  ஓட்டளிக்க எல்லோராலும் முடியவில்லை. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு  தொடுக்கப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இதையடுத்து, வெளிநாடு  வாழ் இந்தியர்களுக்கு பதில் மற்றவர்கள் ஓட்டளிக்கும் உரிமை (ப்ராக்ஸி), தபால் ஓட்டு, இ-ஓட்டுகளை அறிமுகப்படுத்தும் வகையில் தேர்தல்  ஆணைய நிபுணர் குழு, சட்டத் திருத்த முன்வடிவை தயார் செய்து, சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது.

இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி கூறுகையில், ‘‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்கும் வகையில் புதிய சட்டத்  திருத்தத்தை தயாரித்துள்ளோம். அது தற்போது சட்ட அமைச்கத்தின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளோம்”.

“இந்த சட்டம் மூலம் ப்ராக்ஸி முறையில்  (ஒருவருக்கு பதில் மற்றொருவர் வாக்களிக்கும் உரிமை), தபால் ஓட்டு மூலமாக, அல்லது இ-ஓட்டு மூலம் வாக்களிக்க முடியும். வேட்பு மனு தாக்கலில் இருந்து தேர்தல் முடியும் வரை 14 நாட்கள் அவகாசம் உள்ளது”.

“அதற்குள் தபால் ஓட்டுக்களை வெளிநாட்டு வாக்காளர்களுக்கு அனுப்பி அதை திரும்ப பெற்றுவிடலாம். கால அவகாசத்தை குறைக்க தபால்  ஓட்டுகளை கணினி முறையில் அனுப்ப தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது” என்றார்.