Home கலை உலகம் ஜிகர்தண்டா தயாரிப்பாளர் மீது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் புகார்!

ஜிகர்தண்டா தயாரிப்பாளர் மீது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் புகார்!

728
0
SHARE
Ad

karthik-subburajசென்னை, மே 21 – ’ஜிகர்தண்டா’ படத்தை தயாரித்த ‘க்ரூப் நிறுவனத்தின்’ நிர்வாகி கதிரேஷன் மீது அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் புகார் கொடுத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’.

சில நாட்களுக்கு முன்பு ‘இப்படத்தை இந்தியில் எடுக்கும் முயற்சியில் படக்குழு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.மேலும் இந்தியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. ஆனால் அவருக்கு முன்பே படத்தை சாஜித் நட்யட்வாலாவிடம் பெரும் தொகைக்கு படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் விற்றுவிட்டாராம்.

இதையறிந்த கார்த்தி சுப்புராஜ், படத்தில் எனக்கும் 40 சதவீதம் பங்கு உள்ளது என்னிடம் தெரிவிக்காமல் படத்தின் உரிமையை கதிரேசன் விற்றுவிட்டார் என இயக்குநர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் இப்படத்தின் இந்தி பதிப்பகத்தில் பெரிய நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் தயாரிப்பாளர் கதிரேசன்,  கார்த்திக் சுப்புராஜால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் இவரும் புகார் செய்துள்ளார்.