Home நாடு ‘த நியூ வில்லேஜ்’ படத்திற்கான தடை நீடிக்கிறது – உள்துறை அமைச்சு அறிவிப்பு

‘த நியூ வில்லேஜ்’ படத்திற்கான தடை நீடிக்கிறது – உள்துறை அமைச்சு அறிவிப்பு

584
0
SHARE
Ad

the-new-villageகோலாலம்பூர், மே 21 – சர்ச்சைக்குரிய ‘த நியூ வில்லேஜ்’ திரைப்படத்திற்கான தடை நீடிப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

படத்தொகுப்புக்கு (edit) பின்னரும் அத்திரைப்படம் கம்யூனிச புகழ் பாடுவதாக உள்துறை கூறியுள்ளது.

“படத்தொகுப்புக்கு பின்னரும் அந்தத் திரைப்படத்தில் தேசிய நல்லிணக்கத்தையும், பொது ஒழுங்கையும் பாதிக்கக்கூடிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன,” என்று தைப்பிங் தொகுதி ஐசெக உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“எனவே ‘த நியூ வில்லேஜ்’ திரைப்படத்தை திரையிட திரைப்பட தணிக்கை வாரியம்
அனுமதி மறுத்துள்ளது. இதை அப்படத்தின் தயாரிப்பாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்” என்று உள்துறை அமைச்சின் பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 1950களில் மலாயாவை பிரிட்டிஷார் ஆண்டபோது ஒரு கிராமத்துப் பெண்ணுக்கும் இளம் கம்யூனிஸ்ட் போராளிக்கும் ஏற்படும் காதலை சித்தரிக்கும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் அவசர நிலை காலத்தின்போது சீனர்களின் வாழ்க்கை நிலை குறித்தும் விவரிக்கிறது.

வோங் க்யூ லிட் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் கடந்த 2013 ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியீடு காண்பதாக இருந்தது. ஆனால் இத்திரைப்படம், மலாயா கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான கருத்துக்களை கொண்டிருப்பதாக பல்வேறு தரப்பினரும் புகார்களும் எதிர்ப்பும் தெரிவித்திருப்பதாக உள்துறை அமைச்சு அறிவித்தது.

இதையடுத்து ‘த நியூ வில்லேஜ்’ திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.