Home நாடு பாஸ் தேர்தல்: உதவித் தலைவர் பதவிக்கு 6 பேர் போட்டி!

பாஸ் தேர்தல்: உதவித் தலைவர் பதவிக்கு 6 பேர் போட்டி!

460
0
SHARE
Ad

pas 1

கோலாலம்பூர், மே 21 –  அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாஸ் உட்கட்சித் தேர்தலில் 3 உதவித் தலைவர் பதவிகளுக்கு 6 பேர் போட்டியிட உள்ளனர்.

கட்சியின் இரண்டாம் நிலை பொறுப்புக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கிளந்தான் துணை மந்திரி பெசார் டத்தோ நிக் அமர் நிக் அப்துல்லா, தற்போது பதவியில் உள்ள டத்தோ ஹுசாம் மூசா, சலாஹுடின் அயுப் மற்றும் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ மக்ஃபுஸ் ஓமார் ஆகியோரை எதிர்த்து களம் இறங்குகிறார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் பாஸ் தலைவர் இஸ்கந்தர் அப்துல் சமாட் மற்றும் உலாமாவான
இட்ரிஸ் அகமட் ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.

பாஸ் தேர்தல் குழு தலைவர் அஸ்முனி, கட்சியின் தலைமையகத்தில்
புதன்கிழமையன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.

கட்சியின் உயரிய பொறுப்புக்கு தற்போது பதவியில் உள்ள டத்தோஸ்ரீ அப்துல்
ஹாடி அவாங் மீண்டும் களம் இறங்குகிறார். அவரை எதிர்த்து மூத்த தலைவர்
அகமட் அவாங் போட்டியிடுகிறார்.

துணைத் தலைவர் பதவிக்கு மாட்சாபு மற்றும் பகாங் பாஸ் ஆணையர் டத்தோ துவான்
இப்ராகிம் ஆகியோர் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் பதவிக்கு காலஞ்சென்ற கிளந்தான் மந்திரி
பெசார் டத்தோ நிக் அசிசின் மகன் நிக் அப்துல் நிக் அசிஸ் மற்றும்
சுகைசான் கையாத் மோதுகின்றனர்.

மகளிர் பிரிவைப் பொறுத்தவரை, ரந்தாவ் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி சைலா முகமட் யூசோஃபுக்கும் முன்னாள் முஸ்லிமாட் தலைவர் நூரிடா சாலேவுக்கும்
இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.