Home நாடு பிகேஆரில் இருந்து மாணிக்கவாசகம் இடைநீக்கம்!

பிகேஆரில் இருந்து மாணிக்கவாசகம் இடைநீக்கம்!

697
0
SHARE
Ad

manikavasagam3கோலாலம்பூர், மே 15 – சிலாங்கூர் மந்திரி பெசார் அப்துல் காலிட் இப்ராகிம் பண அரசியல் செய்தார் என முன்னாள் காப்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.மாணிக்கவாசகம்  பொதுவில் குற்றம் சாட்டியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பிகேஆர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவின் தலைவர் டான் டீ க்வோங் கூறுகையில், விசாரணை முடியும் வரை இந்த இடைநீக்கம் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே 11 ஆம் தேதி முக்கிய ஊடகம் ஒன்றில் மந்திரி பெசாருக்கு எதிராக அவர் கூறிய குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டன.

#TamilSchoolmychoice

கட்சி தேர்தல் முறைகளில் ஏதேனும் முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில் அதை ஊடகங்களின் வழியாக கொண்டு செல்லக்கூடாது என்ற கட்சியின் கொள்கைகளை மீறியதால் மாணிக்கவாசகம் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று டான் தெரிவித்துள்ளார்.