Home கலை உலகம் பாலிவுட் கதாநாயகர்களுடன் மோதலா? -அசின்!

பாலிவுட் கதாநாயகர்களுடன் மோதலா? -அசின்!

1078
0
SHARE
Ad

asinnடெல்லி, மே 15 – பாலிவுட் கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளுடன் மோதலா என்றதற்கு பதில் அளித்துள்ளார் அசின். பாலிவுட்டில் அதிரடியாக புகுந்த அசின் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்தார். ஆனாலும் அவருக்கு எதிர்பார்த்தளவுக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை.

சக கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளுடன் ஏற்பட்ட மோதலால்தான் பட வாய்ப்புகளை அவரால் கைப்பற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது. கடைசியாக அசின் நடித்த கிலாடி 786 என்ற படம் கடந்த 2012-ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

2 வருடமாக பட வாய்ப்பில்லாமல் முடங்கிக்கிடந்தார். தற்போது ஆல் ஈஸ் வெல் என்ற படத்தில் நடிக்கிறார். சிம்லாவில் நடக்கும் இதன் படப்பிடிப்பில் தற்போது அசின் நடித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

இது பற்றி அசின் கூறியதாவது, “பாலிவுட் நட்சத்திரங்களுடன் மோதலா என்கிறார்கள். நான் இதுவரை பணியாற்றிய நடிகர், நடிகைகள் அனைவருடனும் சந்தோஷமாகவே வேலை செய்திருக்கிறேன். மீண்டும் அவர்களுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஏற்கனவே போல் பச்சான் என்ற படத்தில் அபிஷேக் பச்சனுடன் நடித்தேன். ஆல் ஈஸ் வெல் படத்திலும் அவருடன்தான் நடிக்கிறேன். இதன் படப்பிடிப்பு சிம்லாவில் நடக்கிறது. பாலிவுட் ஸ்டார்கள் யாருடனும் எனக்கு மோதல் கிடையாது” என அசின் கூறினார்.