Home இந்தி மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை  மணக்கிறார் நடிகை அசின்! 

மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை  மணக்கிறார் நடிகை அசின்! 

1109
0
SHARE
Ad

asinமும்பை, ஆகஸ்ட் 10 – நடிகை அசின், இந்தியாவின் மிக முக்கிய தொழில் அதிபரான மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை மணக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இது குறித்து, டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், “நடிகை அசினும், தொழில்அதிபர் ராகுல் சர்மாவும் கடந்த சில வருடங்களாகவே நட்பு ரீதியாக பழகி வந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். 36 வயதான ராகுல் சர்மா, இந்தியாவின் முன்னணி திறன்பேசி நிறுவனமான மைக்ரோமேக்ஸின் நிறுவனர் ஆவார்” என்று குறிப்பிட்டுள்ளது.

ராகுல் சர்மா பற்றி எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காத அசின், “என் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தத் துவங்கி உள்ளேன். அதன் காரணமாகவே, நான் தற்போது ஒப்பந்தமாகி உள்ள படங்களை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளேன்” என்று சூசகமாக கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

தற்போது அசின், அபிஷேக் பச்சனுடன் ‘ஆல் இஸ் வெல்’ என்ற இந்தி படத்தில் மட்டும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.