பக்காத்தான் ராயாட் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் அன்வார் இப்ராகிம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருவது போன்ற நடப்பு சூழ்நிலைகளையும் கடந்து லிம் கிட் சியாங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“பக்காத்தான் ராயாட் இறந்து, அது புதைக்கப்பட்டாலும் கூட, பக்காத்தான் ராயாட் பாரு அல்லது ஹராப்பான் ராயாட் அல்லது ஏதாவது ஒரு புதிய பெயரில் உருவெடுக்கும் புதிய பக்காத்தான் கூட்டணியில், 14-வது பொதுத்தேர்தலில் பிரதமர் பதவிக்கு அன்வார் இப்ராகிமின் பெயரைத் தான் முன்மொழிவோம்” என்று நேற்று இரவு பினாங்கில் நடந்த நிகழ்வு ஒன்றில் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.