Home Featured இந்தியா ஜார்கண்ட் கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி! 

ஜார்கண்ட் கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி! 

966
0
SHARE
Ad

jarghandஜார்கண்ட், ஆகஸ்ட் 10 – ஜார்கண்ட் மாநிலத்தின் பெல்லாபகன் மாவட்டத்தில் உள்ள தியோகர் பகுதியில், புகழ்பெற்ற பெற்ற கோயில் திருவிழாவான சவான் சம்வாரில், இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாயினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர், பீகார் மாநிலத்தவர்கள் என தெரியவந்துள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமி இருந்த விழாவில், கூட்ட நெரிசலை சமாளிக்க சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.