அமெரிக்காவில் இருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு நேற்றிரவு 9.40 மணியளவில் வந்திறங்கிய அவரை செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயற்சி செய்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, எம்ஏசிசி-ஐச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் பிரதமர் துறையின் கீழ் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, “நன்றி. நன்றி. நான் உங்களைப் பின்னர் சந்திக்கிறேன். என்னுடைய பணிகளை முதலில் முடித்துவிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அந்த விவகாரங்கள் குறித்து விமான நிலையத்தில் பேட்டியளிப்பது பாதுகாப்பானதாக இருக்காது என்று சுக்ரி தெரிவித்ததாகவும் மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது.