Home Featured நாடு கடத்தப்பட்ட எண்ணெய் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது – ஆனால் சரக்குகள் மாயம்!

கடத்தப்பட்ட எண்ணெய் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது – ஆனால் சரக்குகள் மாயம்!

582
0
SHARE
Ad

mt-joaquimகோலாலம்பூர், ஆகஸ்ட் 10 – கடந்த சனிக்கிழமை, 3.500 டன் கடல் எரிபொருள் எண்ணெய்யுடன் மலாக்கா நீரிணை அருகே மாயமான சிங்கப்பூர் கப்பல் எம்டி ஜோகுயிம், இந்தோனேசியா கடலில் அதன் சரக்குள் இன்றி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

0055 என்ற கடத்தல் குழுவினர் அக்கப்பலை விடுவித்த பின்னர், 10 பணியாளர்களுடன் இந்தோனேசியாவின் தஞ்சோங் பினாங்கில் இருந்து மலேசியாவின் லங்காவி நோக்கி வந்து கொண்டிருப்பதாக, மலேசிய கடற்படை நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

இந்தோனேசியாவின் ரூபாட் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் கப்பலில் இருந்த சரக்குகள் மாயமாகிவுள்ளதாகவும், கடற்படை முகைமையின் நடவடிக்கை மற்றும் கடல்சார் துணை இயக்குநர் அகமட் புசி அப் காதர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice