Home One Line P2 ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை, பாஜகவினர் அதிர்ச்சியில் சூழ்ந்துள்ளனர்!

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை, பாஜகவினர் அதிர்ச்சியில் சூழ்ந்துள்ளனர்!

1063
0
SHARE
Ad

புது டில்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் வருகிற ஜனவரி 5-ஆம் தேதியுடன் முதலமைச்சர் ரகுபர் தாஸின் பாஜக ஆட்சி முடிவடைய இருக்கும் நிலையில், அங்கு  கடந்த நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி , டிசம்பர் 20-ஆம் தேதி வரையிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று திங்கிட்கிழமை, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்லுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (ஜெஎம்எம்), காங்கிரஸ் கூட்டணி மற்றம் ஆளும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ஆயினும், தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால், பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

தற்போது, காங்கிரஸ்-ஜெஎம்எம் கூட்டணி 40 இடங்களில் முன்னிலையிலும், பாஜக 28 தொகுதிகளில் முன்னிலையிலும் உள்ளன.