புது டில்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் வருகிற ஜனவரி 5-ஆம் தேதியுடன் முதலமைச்சர் ரகுபர் தாஸின் பாஜக ஆட்சி முடிவடைய இருக்கும் நிலையில், அங்கு கடந்த நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 20-ஆம் தேதி வரையிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று திங்கிட்கிழமை, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்லுக்கான வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஜார்கண்ட் முக்தி மோர்சா (ஜெஎம்எம்), காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு 25 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
முதல்வராக முன்பு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன் பொறுப்பேற்க உள்ளார்.
முன்னதாக, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 14 இடங்களில் 11 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.