Home இந்தியா ஜார்க்கண்ட் கோவில் நெரிசலில் பலியானோருக்கு 2 லட்சம் இழப்பீடு: மோடி இரங்கல்!

ஜார்க்கண்ட் கோவில் நெரிசலில் பலியானோருக்கு 2 லட்சம் இழப்பீடு: மோடி இரங்கல்!

1081
0
SHARE
Ad

jarராஞ்சி, ஆகஸ்ட் 10-  ஜார்க்கண்ட் மாநிலத்தில் துர்கா கோவிலில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்; 50 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.அதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில்,நெரிசலில் சிக்கிப் பலியானோர் குடும்பத்திற்குத் தலா ரூ.2 லட்சம் உதவித்தொகையும்,  காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 உதவித் தொகையும் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“ஜார்கண்ட் மாநிலக் கோயில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்தத் துயர நேரத்தில் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை சுற்றியே உள்ளன.

ஜார்கண்ட் முதல் மந்திரியுடன் தொலைபேசி மூலம் பேசி, அங்குள்ள நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வரும்படி கேட்டுக் கொண்டுள்ளேன். காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் நலமடைய பிரார்த்திக்கிறேன்”எனத்  தனது இரங்கல் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.