Home Featured கலையுலகம் நிஜத்திலும் செல்போன் நிறுவன அதிபரை மணந்தார் ‘கஜினி’ அசின்!

நிஜத்திலும் செல்போன் நிறுவன அதிபரை மணந்தார் ‘கஜினி’ அசின்!

829
0
SHARE
Ad

CZGhEaJUYAAHl8pமும்பை – தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழித் திரைப்படங்களிலும் நடிப்பில் கலக்கிய நடிகை அசின்(30), இந்தியாவின் மிக முக்கிய செல்பேசி நிறுவனமான மைக்ரோமேக்சின் அதிபர் ராகுல் ஷர்மாவை(39) நேற்று மணம் முடித்தார். காலை கத்தோலிக்க கிறிஸ்த்துவ முறைப்படி நடந்த திருமணம், மாலை இந்து முறைப்படி நடந்ததாகக் கூறப்படுகிறது.

CZGhE10UkAA3xD8“நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக  இருக்கிறோம். மிக அழகான திருமணம். அனைவரும் அற்புதமாக இருந்தனர்” என்று ராகுல் ஷர்மா தனது வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

CZGe0yPWwAIEgKrஇவர்கள் இணைவதற்கு காரணமான நடிகர் அக்ஷய் குமார், திருமணம் முடியும் வரை உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.