Home Featured நாடு நாடெங்கிலும் தீவிரப் பாதுகாப்பு: காவல்துறையுடன் இராணுவமும் களமிறங்கியது!

நாடெங்கிலும் தீவிரப் பாதுகாப்பு: காவல்துறையுடன் இராணுவமும் களமிறங்கியது!

443
0
SHARE
Ad

EPA/FAZRY ISMAIL

கோலாலம்பூர் – அண்டை நாடான இந்தோனேசியாவில் அண்மையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, நாடெங்கிலும் காவல்துறையினருடன், இராணுவமும் பாதுகாப்பில் இணைந்துள்ளது.

நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில், தீவிரவாதத் தாக்குதலை எதிர்க்கொள்வது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அதில் இராணுவத்தைக் களமிறக்கும் முடிவெடுக்கப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கூட்டுக் கண்காணிப்பு உடனடியாக அமல்படுத்தப்பட்டு, நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன என்றும் நஜிப் நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், புக்கிட் பிந்தாங் உள்ளிட்ட முக்கிய வணிக வளாகங்களிலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

“இது ஒரு அவசரநிலைப் பிரகடனம் அல்ல. நமது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம் அவ்வளவு தான். நிலைமை கட்டுக்குள் இருப்பதை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கைகள்” என்றும் நஜிப் கூறியுள்ளார்.