Home கலை உலகம் தாயானார் நடிகை அசின்!

தாயானார் நடிகை அசின்!

1131
0
SHARE
Ad

Asin-and-rahul-sharmaபுதுடெல்லி -‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, அதன் பிறகு விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துப் புகழ்பெற்ற நடிகை அசின், பாலிவுட் பக்கம் போய் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.

பாலிவுட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த அசின், இந்த ஆண்டு தொடக்கத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவைத் திருமணம் செய்தார்.

இத்தம்பதிக்கு நேற்று அக்டோபர் 24-ம் தேதி, அழகிய பெண் குழந்தை பிறந்தது.

#TamilSchoolmychoice

இதனை ராகுல் தனது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.