Home உலகம் சிங்கப்பூர் கடப்பிதழ்: உலகிலேயே ‘அதிக சக்தி வாய்ந்ததாக’ மாறியது!

சிங்கப்பூர் கடப்பிதழ்: உலகிலேயே ‘அதிக சக்தி வாய்ந்ததாக’ மாறியது!

1335
0
SHARE
Ad

Singapore-passportசிங்கப்பூர் – சிங்கப்பூரர்களுக்கு விசா நடைமுறையை பராகுவே நாடு நீக்கியதையடுத்து, உலகின் அதிக சக்தி வாய்ந்த கடப்பிதழாக ‘சிங்கப்பூர் கடப்பிதழ்’ மாறியிருக்கிறது.

உலகில் மொத்தம் 159 நாடுகளுக்கு சிங்கப்பூர் கடப்பிதழ் மூலம் விசா இல்லாமல் செல்லலாம்.

ஆசிய நாடுகளில் முதல் முறையாக ஒரு நாடு இப்படி ஒரு அந்தஸ்தைப் பெற்றிருப்பதாக அனைத்துலக ஆலோசனை நிறுவனமான ஆர்டான் கேப்பிடலின் ஆய்வறிக்கை கூறுகின்றது.

#TamilSchoolmychoice

உலகில் அதிக சக்திவாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் மலேசியக் கடப்பிதழ் 4-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.