Home Featured நாடு உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ்: மலேசியா 4-வது இடத்திற்கு முன்னேறியது!

உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ்: மலேசியா 4-வது இடத்திற்கு முன்னேறியது!

1052
0
SHARE
Ad

malaysian-passportகோலாலம்பூர் – குளோபல் பாஸ்போர்ட் பவர் ரேங்க் 2017  வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் மலேசியா நான்காவது இடத்தில் உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு முதல், மலேசியா இரண்டு விசா இல்லாதப் பயண மாற்றங்களை அடைந்ததன் மூலம், மொத்தமாக 156 விஎப்எஸ் (visa-free score ) பெற்று, 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.

கடந்த ஜனவரி மாத அறிக்கையின் படி, மலேசியா 154 புள்ளிகளில் 5-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice