Home Featured இந்தியா விவசாயிகள் பற்றி மோடி டுவிட்டரில் முக்கியக் கருத்து!

விவசாயிகள் பற்றி மோடி டுவிட்டரில் முக்கியக் கருத்து!

808
0
SHARE
Ad

narendra modi-tughlak-annual gatheringபுதுடெல்லி – தமிழக விவசாயிகள் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக டெல்லியில், பிரதமர் அலுவலகம் முன்பு, எலி தின்று, பாம்பு தின்று நூதன முறையில் போராட்டம் நடத்தி கடைசியில் நிர்வாண நிலையிலும் போராட்டம் செய்து பார்த்துவிட்டனர்.

இந்நிலையில், இதுவரை வாய் திறந்திடாத இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள் பற்றி கருத்து ஒன்றைத் தனது டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

அதில், “இந்தியாவின் விவசாயிகள் தான் தேசத்தின் பெருமை. அவர்கள் தங்களின் கடின உழைப்பால் மில்லியன் கணக்கில் உணவளிக்கின்றனர். அவர்களின் நலனுக்காக முடிந்தவரை எல்லாமே செய்கிறோம்” என்று மோடி டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

எனினும், அவர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளைக் குறிப்பிட்டு அதில் எதுவும் சொல்லவில்லை.