Home உலகம் சிங்கப்பூர்-ஜப்பான் உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழ்களைக் கொண்ட நாடுகள்

சிங்கப்பூர்-ஜப்பான் உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழ்களைக் கொண்ட நாடுகள்

949
0
SHARE
Ad

சிங்கப்பூர் : அண்மையக் காலமாக உலகளாவிய குறியீட்டின்படி, தொடர்ந்து உலகின் மிக சக்திவாய்ந்த இரண்டாவது கடப்பிதழைக் கொண்டிருந்த சிங்கப்பூர் தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழைக் கொண்டுள்ள ஜப்பான் நாட்டுடன் சிங்கப்பூரும் இணைந்துள்ளது. இந்த இரண்டு நாடுகளுமே தற்போது உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழ்களைக் கொண்டிருக்கும் முதல் இரண்டு நாடுகளாகும்.

உலகின் மிக சக்திவாய்ந்த கடப்பிதழ்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அந்த விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

விசா எனப்படும் குடி நுழைவு அனுமதி இன்றி அதிக நாடுகளுக்கு எந்த நாட்டின் கடப்பிதழைக் கொண்டு பயணம் செய்ய முடியும் என்பதைக் கொண்டு சக்தி வாய்ந்த கடப்பிதழ்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. 

அந்தவகையில் முதலிடத்தில் சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகள் இருக்கின்றன. இந்த இரு நாடுகளின் கடப்பிதழ்களை வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு குடிநுழைவு அனுமதி இன்றி பயணம் செய்ய முடியும்.

இரண்டாவது இடத்தில் தென்கொரியாவும் ஜெர்மனியும் இருக்கின்றன. இந்த நாடுகளின் கடப்பிதழ்களைக் கொண்டு 190 நாடுகளுக்கு குடி நுழைவு அனுமதி இன்றி பயணம் செய்ய முடியும்.

இந்த வரிசையில் மலேசியாவுக்கு 13-வது இடம் கிடைத்திருக்கிறது. மலேசியக் கடப்பிதழைக் கொண்டு மலேசியர்கள் 179 நாடுகளுக்கு குடிநுழைவு அனுமதியின்றி பயணம் செய்ய முடியும்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal