Home உலகம் சிங்கப்பூர் கடப்பிதழ் உலகின் இரண்டாவது சக்திவாய்ந்தது

சிங்கப்பூர் கடப்பிதழ் உலகின் இரண்டாவது சக்திவாய்ந்தது

618
0
SHARE
Ad

கலிபோர்னியா: உலகளாவிய குறியீட்டின்படி, ஜப்பான் தொடர்ந்து உலகின் மிக சக்திவாய்ந்த கடப்பிதழைக் கொண்டுள்ளது. இரண்டாவது சக்திவாய்ந்த கடப்பிதழை சிங்கப்பூர் கொண்டுள்ளது.

உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸால் தீர்மானிக்கும் இந்த குறியீடானது, விசா தேவை இல்லாமல் எந்தனை இடங்களுக்கு செல்ல அனுமதி உள்ளது என்ற அடிப்படையில் கடப்பிதழ்களை வரிசைப்படுத்துகிறது. பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படுகிறது.

தற்போது, ஜப்பானிய கடப்பிதழை வைத்திருப்பவர்கள் விசா தேவையில்லாமல் 193 இடங்களுக்குச் செல்லலாம். சிங்கப்பூர் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் 192 இடங்களுக்கு அணுக அனுமதிக்கிறது.