Home கலை உலகம் ‘சைமா’ விருது விழாவில் நடிகை அசின் – (பிரத்தியேகப் படங்கள் 8)

‘சைமா’ விருது விழாவில் நடிகை அசின் – (பிரத்தியேகப் படங்கள் 8)

891
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 14 – ‘சைமா’ என்று அழைக்கப்படும் தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது விழா கடந்த இரண்டு நாட்களாக கோலாலம்பூரில் மிக விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய நான்கு மொழிகளில் இருந்தும் சிறந்த நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் நடிகை அசின் இளஞ்சிவப்பு நிறத்தில் கருப்பு ஜரிகை உடைய புடவை அணிந்து மிக அழகாக சிவப்பு கம்பள வரவேற்பில் நடந்து வந்தார்.

#TamilSchoolmychoice

IMG_4304

தமிழில் அறிமுகமாகி கமல்ஹாசன், சூர்யா, விஜய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களோடு நடித்த அசின், பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்து போன பிறகு தமிழில் மிகவும் குறைவான படங்களில் தான் நடிக்கத் தொடங்கினார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, விரைவில் தமிழுக்கு மீண்டும் வரப்போவதாகத் தெரிவித்தார்.

IMG_4328

மலையாள தொலைக்காட்சிக்கு தனது தாய் மொழியான மலையாளத்தில் பதிலளித்த அசின், அதன் பின்னர் தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தமிழில் பேசினார். அதன் பின்னர் தெலுங்கு, இந்தி என ஒவ்வொரு மொழி தொலைக்காட்சிக்கு ஏற்றவாறு அந்தந்த மொழிகளில் பதிலளித்தார்.

IMG_4315

இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் 5 -க்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்தவர் அசின் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_4331

உங்களுடன் நடித்த கதாநாயகர்களில் யாருடன் நடித்தது பிடிக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அசின், சூர்யா என்று சொன்னால் விஜய் கோபப்படுவார். அதனால் தான் நடித்த கதாநாயகர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் நடிப்பு குறித்த பல நல்ல விசயங்களை தெரிந்து கொண்டதாக அசின் தெரிவித்தார்.

செய்திகள், பிரத்தியேகப் படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)