Home இந்தியா கமல் மீது வழக்குப் பதிந்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

கமல் மீது வழக்குப் பதிந்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

817
0
SHARE
Ad

Kamal-Hasanசென்னை – ஆராய்ச்சி முடிவுகள் வரும் வரை, தனது ஆதரவாளர்கள் யாரும் டிங்கி பாதிப்புக்கு நிலவேம்பு கஷாயம் விநியோகம் செய்ய வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் அண்மையில் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது பதிவுக்கு எதிராக காவல்துறையில் தேவராஜன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இதனிடையே, அவரது புகார் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், நிலவேம்பு கஷாயம் தொடர்பாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.