Home நாடு நஜிப்பின் அமெரிக்கப் பயணம்: செலவுத் தொகையை வெளியிட அரசு மறுப்பு!

நஜிப்பின் அமெரிக்கப் பயணம்: செலவுத் தொகையை வெளியிட அரசு மறுப்பு!

881
0
SHARE
Ad

najib-trump-us visit-13092017 (4)புத்ராஜெயா – கடந்த மாதம் வாஷிங்கடனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், அப்பயணத்திற்கான மொத்த செலவு என்னவென்று, சட்டத்துறை அமைச்சர் அசலினா ஒத்மான், நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக்கிற்கு எழுத்துப்பூர்வப் பதிலளித்தார்.

அதில், அப்பயணத்திற்கான மொத்த செலவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டம் 1980, பிரிவு 5-ன் கீழ் வருவதாக அசலினா குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“விமானங்கள், தங்குமிடம், போக்குவரத்து, உணவு, சலவை தொலைப்பேசி மற்றும் மற்ற செலவுகள் அனைத்தும் நேரத்திற்குத் தகுந்தாற் போல் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது” என்று இரண்டு பத்தியில் அசலினா பதிலளித்திருக்கிறார்.

என்றாலும், அதில் உண்மையான மொத்த செலவு எவ்வளவு என்பதை அவர் குறிப்பிடவில்லை.