Home நாடு ஜோ லோ குறித்துக் கருத்துக் கூற இண்டர்போல் மறுப்பு!

ஜோ லோ குறித்துக் கருத்துக் கூற இண்டர்போல் மறுப்பு!

835
0
SHARE
Ad

1mdb-jho-lowகோலாலம்பூர் – 1எம்டிபியில் தொடர்புடைய தொழிலதிபர் ஜோ லோவைத் தேட மலேசியாவுக்கு அனைத்துலக காவல்துறை ஓருங்கிணைப்புக் குழு (இண்டர்போல்) உதவி செய்கிறதா? என்பது குறித்துக் கருத்து கூற மறுத்திருக்கிறது.

இது குறித்து துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி கூறுகையில், “இண்டர்போலைச் சேர்ந்த 192 நாடுகளைச் சேர்ந்த காவல்துறை, லையானில் உள்ள அதன் பொதுச்செயலாளரிடம் தகவல் வெளியிடும். அந்தத் தகவல் அதன் உறுப்பினர் நாடுகளிடம் மட்டுமே தெரியும்”

“எனவே தனிப்பட்ட அல்லது சிறப்பு வழக்குகள் குறித்து இண்டர்போல் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காது. அதற்கு சிறப்பு அனுமதி தேவை”

#TamilSchoolmychoice

“ஜோ லோ தொடர்பான தகவல்கள் கோரிக்கையின் அடிப்படையில், அதிகாரிகளின் சிறப்பு அனுமதியோடு மட்டுமே தெரிவிக்கப்படும்” என்று மலேசியக்கினியிடம் தெரிவித்திருக்கிறார்.